×

தோவாளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

ஆரல்வாய்மொழி,மே 19: தோவாளை இளைஞர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட கிரிக்கெட் போட்டியினை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார் தோவாளை இளைஞர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சாந்தினி பகவதியப்பன் ,தோவாளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் , முன்னாள் துணைத் தலைவர் தாணு ,குமரி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன், தோவாளை இளைஞர் இயக்க தலைவர் தங்கம், இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தோவாளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thovalai: Thalavaisundaram MLA ,Aralvaimozhi ,Thalavaisundaram MLA ,Thovalai Youth Movement ,Thovalai Government Higher Secondary School ,Thalavaisundaram MLA.… ,Thovalai ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...