×

தொண்டி கடல் பகுதியில் தீவிர ரோந்து

தொண்டி, ஏப்.25: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து தொண்டி கடல் பகுதியில், மரைன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்கியதில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி விட்டனர். அவர்களை பிடிக்க முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொண்டி கடல் பகுதியில் மரைன் போலீசார் அதிநவீன ரோந்து கப்பல் மூலம் கடல் பகுதியில் ரோந்து செய்து வருகின்றனர். புதிய நபர்கள், புதிய படகுகள் தென்பட்டால் உடனடியாக மரைன் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

The post தொண்டி கடல் பகுதியில் தீவிர ரோந்து appeared first on Dinakaran.

Tags : Tondi sea ,Tondi ,Kashmir ,Marine Police ,Pahalgam ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...