×

தேருக்கு தார்ப்பாய் குடை முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டை, மே 12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மருத்துவக்குழுவினரால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் 150பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் அறுவை சிகிச்சைக்கு 58பேர் தேர்வு செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த முகாமில் செயலாளர் பத்மநாபன், முன்னாள் தலைவர்கள் .ரெங்கசாமி, கண்ணதாசன், சிதம்பர சபாபதி, தலைவர் தேர்வு பாலசந்தர், நிர்வாகிகள் காந்திநாராயணன் அந்தோணிராஜா, அமிர்தா தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் செல்லத்துரை, கவிஞர் சிதம்பரம், பேரூராட்சி கவுன்சிலர் அபூபக்கர் சித்திக் தமிழ் இலக்கிய மன்ற கௌரவ தலைவர் ராஜ்மோகன், ஓய்வுபெற்ற பிடிஓ ஜீவானந்தம், ஓய்வுபெற்ற அரசு துறை அலுவலர்கள் செல்லப்பா, சிதம்பரம், உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

The post தேருக்கு தார்ப்பாய் குடை முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Muthupettai ,Pudththeru Government Panchayat Union Middle School ,Tiruvarur district ,Rotary Club ,President ,Sakul Hameed ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...