- தேனி லைஃப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி
- பிறகு நான்
- சென்னை அறம் அறக்கட்டளை
- சென்னை
- அறம் அறக்கட்டளை
- தின மலர்
தேனி, மே 27: தேனி லைப் இன்னவேசன் பப்ளிக் பள்ளிக்கு சிறந்த கல்விச் சேவைக்கான அறம் விருதினை சென்னை அறம் அறக்கட்டளை வழங்கியது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அறம் அறக்கட்டளை சார்பில், சிறந்த கல்வி நிறுவனத்திற்கான அறம் விருதினை தேனி லைப் இன்னவேசன் பப்ளிக் பள்ளிக்கு வழங்கியது. இவ்விழாவில் முனைவர் சௌமியாஅன்புமணி, முனைவர் ஞானசம்மந்தன், முனைவர் பாஸ்கரன் மற்றும் நடிகர் பாலா கலந்து கொண்டு விருதினை வழங்கினார். இது குறித்து தேனி லைப் இன்னவேசன் பப்ளிக் பள்ளி தாளாளர் நாராயணபிரபு கூறியதாவது, ‘‘தேனி மாவட்டத்தில் முதன்முறையாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கற்பிக்கப்படுவதிலும், ரோபோடிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கல்வி கற்பிக்கப்படுவதால் எங்களின் கல்வி நிறுவனத்திற்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்விருது பெற உழைத்த பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
The post தேனி லைப் இன்னவேசன் பப்ளிக் பள்ளிக்கு சிறந்த கல்விச் சேவைக்கான அறம் விருது வழங்கல் appeared first on Dinakaran.
