×

தேசிய குழந்தைகள் தின விழா பங்கேற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

ராமநாதபுரம். நவ. 30: புதுடெல்லியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாணவர்கள் பிரகுல், கிஷோர், புகழ்மதி, ஹரி பிரித்திவிராஜ், ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் சிலம்பாட்டம், சுருள்வாள், மான் கொம்பு உள்ளிட்டவற்றை நிகழ்த்தினர். இதையொட்டி மாணவர்களுக்கு தேசிய பள்ளிக்டகல்வி இயக்குநர் முகுந்தா அகர்வால் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். இதையடுத்த சொந்த ஊர் திரும்பிய மாணவர்கள் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், முதன்மை கல்வி அலுவலர் சின்ராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்களை கலெக்டர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சிலம்பு ஆசிரியர் ஆகாஷ், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோக சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தேசிய குழந்தைகள் தின விழா பங்கேற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : National Children's Day Festival ,Ramanathapuram ,Prakul ,Kishore ,Lummati ,Hari Prithiviraj ,Madurai Regional Art and Culture Center ,Ramanathapuram District Jawagar Children's Forum ,Day ,New Delhi ,Tamils ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு கணவர் உடலை தானமாக வழங்கிய மூதாட்டி