×

தென்னூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி, மே 21: தென்னூர் துணை மின் நிலையத்தில் மே22ம் தேதி நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி, தென்னூர் 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மே 22ம் தேதி காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர்பைபாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், வள்ளூவர்நகர், நத்தர்ஷாபள்ளிவாசல், பழைய குட்செட்ரோடு, மேலபுலிவார்டுரோடு,

ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபுரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிலேதார் தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதே மில்லத்சாலை, பெரியசெட்டி தெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என திருச்சி, தென்னூர் நகரியம், இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

The post தென்னூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thennur ,Trichy ,Thennur Sub-station ,Tamil Nadu Electricity Distribution Corporation ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்