×

தென்காசியில் துப்பாக்கி சுடுதல் போட்டி

தென்காசி,மே 19: தென்காசியில் மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியை கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பின் சார்பில், தென் மாவட்டங்களுக்கு இடையேயான பிரண்ட்லி இன்டர் டிஸ்டிரிக்ட் ஷூட்டிங் காம்பெடிஷன், தென்காசி மேலமெஞ்ஞானபுரத்தில் உள்ள தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பில் வைத்து நடந்தது.இப்போட்டியினை தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். டிஎஸ்பி பாஸ்கர் பாபு, தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷனின் செகரட்டரி வேல் சங்கர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபில் கிளப்பின் செகரட்டரி ரஷீத் வரவேற்றார். விழாவில் அர்னால்டு அரசு, சக்தி மணிகண்டன், ரிஸ்வி, கார்த்திகேயன், டாக்டர். ராம்குமார், டாக்டர் கிருத்திகா, ஜெய செந்தில் குமார், கணேஷ் குமார், பர்னபாஸ் கோவில்பிள்ளை,ஆண்டனி, டேவிட் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

The post தென்காசியில் துப்பாக்கி சுடுதல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Collector ,Kamal Kishore ,District Rifle Club ,Tenkasi District Rifle Club ,Tenkasi… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...