×

தூத்துக்குடியில் புதிய மழைநீர் வடிகால் பணி

 

தூத்துக்குடி, மே 28: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து மத்திய அரசு ஊழியர் காலனி வரை நடைபெற்று வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய வடிகால் மற்றும் சாலை பணிநடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக காமராஜர் கல்லூரி முன்பு இருந்து மத்திய அரசு ஊழியர் காலனி வரை புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மழை காலத்திற்கு முன்பு வடிகால் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த பணிகள், 2 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற இடங்களில் நடைபெறும் பணிகளும் துரிதப்படுத்தப்படும், என்றார். ஆய்வின்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடியில் புதிய மழைநீர் வடிகால் பணி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Mayor ,Jagan Periyasamy ,Thoothukudi Kamaraj College ,Central Government Employees Colony ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...