×

துவாசுதேவநல்லூர் அருகே ரூ.51 லட்சத்தில் சாலைப்பணி

 

சிவகிரி, மே 28: வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள சண்முகநாதபுரத்தில் தார் சாலை பணியை யூனியன் சேர்மன் பொன் முத்தையாப்பாண்டியன் தொடங்கி வைத்தார். சண்முகநாதபுரத்தில் இருந்து ராயகிரி வரை டாக்டர் கலைஞரின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பில் சுமார் 1.200 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் பொன் முத்தையாப்பாண்டியன் துவக்கி வைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மகேந்திரா தலைமை வகித்தார். ஒன்றிய பொறியாளர்கள் முருகையா, ஹவ்வா ஷகிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் விஜயகுமார், கிளை செயலாளர் இசக்கிமுத்து, ஒன்றிய பிரதிநிதி சூசைராஜ், அவைத்தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் சிவன்ராஜ், அரசு ஒப்பந்ததாரர்கள் வேலு பாண்டி, மணிகண்டன் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முருகராஜ் நன்றி கூறினார்.

The post துவாசுதேவநல்லூர் அருகே ரூ.51 லட்சத்தில் சாலைப்பணி appeared first on Dinakaran.

Tags : Tuvasudevanallur ,Sivagiri ,Union Chairman Pon Muthaiapandian ,Shanmuganathapuram ,Ramanathapuram ,Vasudevanallur ,Dr. ,Kalaignar ,Rayagiri ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...