×

திருவாலி ஊராட்சியில் ஆழ்வார் ஆற்றில் புதியபாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி, ஜூன் 7: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி ஊராட்சியில் இருந்து காரைமேடு ஊராட்சி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் வகையில் மண் சாலைஅமைந்துள்ளது. இந்த சாலையின் நடுவே ஆழ்வார் ஆறு கடந்து செல்கிறது இந்த ஆற்றின் நடுவே சிமெண்ட் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் நடந்து மட்டுமே செல்ல முடியும் மழைக்காலத்தில் இந்த சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாது இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் சுற்றி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர நேரிடும் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் தரைப் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

போக்குவரத்திற்கு தகுந்தால் போல் புதிய பாலம் கட்டினால் விவசாயிகள் அறுவடை நேரங்களில் கனரக வாகனங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்த முடியும். இதே போல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்த முடியும். தற்போது உள்ள மண் சாலையை மாற்றி புதிய தார் சாலை அமைத்து ஆழ்வார் ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள், மாவட்ட நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post திருவாலி ஊராட்சியில் ஆழ்வார் ஆற்றில் புதியபாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alwar river ,Thiruvali panchayat ,Sirkazhi ,Karaimedu panchayat ,Mayiladuthurai district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...