×

திருவரங்குளம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 4: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் 48 ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கலந்து கொண்ட ஊராட்சி செயலாளர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் செந்தில்குமார் ஊராட்சி பகுதியில் உள்ள கருவேல் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு குடிதண்ணீர் போன்ற வசதிகளை தங்கு தடை இன்றி செய்து கொடுக்க கேட்டுக வேண்டும். ஊராட்சி பகுதிகளில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், நிலுவையில் உள்ள வீட்டு வரி பாக்கிகள உடனடியாக வசூல் செய்திடவும், ஏற்கனவே புதிய வீடு கட்டி உள்ளவர்களுக்கு அரசின்வீடு கட்டியதற்கு அனுமதி பெற்றிட கேட்டுக் கொண்டார். மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

The post திருவரங்குளம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Thiruvarangulam Union ,Pudukkottai ,Thiruvarangulam Panchayat Union ,Panchayat Union ,Area Development Officer ,Panchayats Senthilkumar ,Commissioner ,Muthuraman… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...