×

திருவட்டார் அருகே பிளஸ் 2 மாணவி மாயம்

 

நாகர்கோவில், மே 8: திருவட்டார் அருகே உள்ள தேமானூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஏற்றக்கோடு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தற்போது தேர்வு எழுதி உள்ளார். சம்பவத்தன்று காலை 11 மணியளவில் மாணவியின் தாயார் உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்து வந்தார்.

மாலை 3 மணியளவில் அவரது தாயார் திரும்பி வந்த போது, மாணவியை காண வில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும், உறவினர்கள், தோழிகளிடம் விசாரித்தும் மாணவி குறித்து தகவல் இல்லை. இதையடுத்து அவரது சகோதரர் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருவட்டார் அருகே பிளஸ் 2 மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvattar ,Nagercoil ,Demanur ,Lakkakodu School ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...