×
Saravana Stores

திருமயம், அரிமளம் வார சந்தையில் தக்காளி விலை குறைவு

 

திருமயம்,செப்.10: திருமயம், அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற வார சந்தைகளில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி விலை கட்டுக்குள் இருப்பதால் கிராம மக்கள் ஆறுதல் அடைந்தனர். தமிழர்களின் சமையல் காய்கறிகளில் மிகவும் முக்கியமானதாக வெங்காயம், தக்காளி ஆகியவை உள்ளது. இந்த இரு காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் போது அது கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. அதேசமயம் மற்ற காய்கறிகள் விலை அதிகமாக குறைவாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் விலை கட்டுக்குள் இருக்கும் போது கிராம மக்கள் சற்று நிம்மதி அடைகின்றனர்.

இதன் அடிப்படையில் அரிமளம், திருமயம் பகுதியில் நேற்று நடைபெற்ற வார சந்தைகளில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்கப்படுகிறது. இதேபோல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 முதல் 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது கடந்த காலங்களில் விற்பனையான விலையை காட்டிலும் விலையில் பெரிய அளவில் ஏற்றம் இல்லாததால் இல்லத்தரசிகள், ஏழை மக்கள் ஆறுதல் அடைந்தனர். இதேபோல் உருளைக்கிழங்கு கிலோ ரூ.50 முதல் 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ரூ.40 முதல் 50 மற்ற காய்கறிகளும் வழக்கமான விலையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post திருமயம், அரிமளம் வார சந்தையில் தக்காளி விலை குறைவு appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Arimalam ,Tirumayam ,Tamils ,
× RELATED தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி...