×

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலி: ஆக்டிங் டிரைவர் கைது

திருத்தணி: திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலியாக இருந்த ஆக்டிங் டிரைவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் மேல் நெடுகல் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் நாகன். இவரது மகன் ஆதிமூலம் (30). இவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருகிறார். திருத்தணி அருகே உள்ள புஜ்ஜி ரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதன்பிறகு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில், அந்த பெண்ணை ஆதிமூலம் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தன்னை ஏமாற்றி பலமுறை ஜாலியாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்று திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து ஆதிமூலத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். இதன்பிறகு அவரை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலி: ஆக்டிங் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jolly ,Tiruvallur District Pallipatthu Circle ,Dinakaran ,
× RELATED எனக்கு எப்பவுமே அவரு தான் ஹீரோ! Soori Jolly Speech at Garudan Success Meet | Sasikumar | Vetrimaaran