×

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மனைவியுடன் சாமி தரிசனம்

காரைக்கால், நவ.10: திருநள்ளாறில் உலகப்புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நேற்று (சனிக்கிழமை) தமிழக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை தமிழக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவரது மனைவியுடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக கோயிலில் மூலவர் தர்பாரண்யேஸ் தரிசனம் செய்தார். தொடர்ந்து சனீஸ்வர பகவான் சன்னதியில் சிறப்பு பூஜையில் பங்கேற்று ஆலயத்தில் எள் தீபம் ஏற்றி வழிபட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சனிக்கிழமை என்பதால் நேற்று ஏராளமானோர் கோயிலுக்கு வந்து சனீஸ்வரபகவானை தரிசனம் செய்தனர்.

The post திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மனைவியுடன் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sami Darisanam ,Senji Mastan ,Thirunallaru Sanishwara Lord Temple ,Karaikal ,Minister ,Sanishwara Lord ,Shrine ,Thirunallar ,Sami ,Thirunalalaru Sanishwara Lord Shrine ,Sami Darishanam ,Tirunalaru Sanishwara Lord Temple ,
× RELATED மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினி மகள் சாமி தரிசனம்