×

மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினி மகள் சாமி தரிசனம்

திண்டிவனம்: தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் கணவருடன் சுவாமி தரிசனம் செய்துவரும் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மயிலம் முருகன் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் கடந்த இரு தினங்களாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

இதனை தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சவுந்தர்யாவும், விசாகனும் காரில் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

The post மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினி மகள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Rajini ,Sami Daryanam ,Mayilam ,Murugan Temple ,Rajinikanth ,Soundarya Mayilam Murugan ,Swami ,Tamil Nadu ,Soundarya ,Visakhan ,Sami Darisanam ,Murugan ,Temple ,
× RELATED ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவிருப்பம்: இசையமைப்பாளர் தேவா