×

திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் இயற்கை நுண்உரம் தயாரிக்கும் மையத்தை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டார்

திருத்துறைப்பூண்டி, மே 29: திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையத்தை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டார். திருவாரூர மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது.  இந்த 24 வார்டுகளையும் தொடர்ந்து பார்வையிட்டு வரும் நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் அவர் குறைகளை கேட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த ஆண்டும் ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த அவர், அதன் பிறகும் நாள்தோறும் வார்டுகளில் நடக்கும் பணிகளை காலை 5 மணி முதல் பார்வையிட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார். இதில் சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டார்.

The post திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் இயற்கை நுண்உரம் தயாரிக்கும் மையத்தை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Municipal ,Tiruthuraipoondi Municipality ,Tiruthuraipoondi ,Municipal Chairman ,Thiruvarur district ,Kavitha ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...