×

திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

திருச்செங்கோடு, ஜூன் 9: திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் திறப்பு விழாவில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு திறந்து வைத்தார். திருச்செங்கோடு- வேலூர் சாலையில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில் தலைமை வகித்தார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர்.மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி வைத்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, திருச்சி மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மேயர் அன்பழகன், குமாரபாளையம் ஜேகேஎஸ்.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ், ரங்கசாமி, வெங்கடாசலம், பொருளாளர் ராஜாராம், துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, சாந்தி, மொழிப்போர் தியாகி பரமானந்தம், நகர் மன்ற தலைவர்கள் நளினிசுரேஷ்பாபு, விஜய்கண்ணன், செல்வராஜ், யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், மாநில மகளிர் சமூக வலைதளப்பொறுப்பாளர் ரியா, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், திருநாவுக்கரசு, சிவக்குமார், வேலுமணி, ரவிச்சந்திரன், இந்திராணி, ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், கபிலர்மலை சண்முகம், ஏபிஆர் சண்முகம், மல்லை பழனிவேல், எலச்சிபாளையம் கிழக்கு தங்கவேல், மேற்கு செல்வராஜ், தனராசு, பள்ளிபாளையம் செல்வம், இளங்கோவன், நாச்சிமுத்து, நகர செயலாளர்கள் கார்த்திகேயன், பள்ளிபாளையம் குமார், குமாரபாளையம் செல்வம், ஞானசேகரன், பேரூர் செயலாளர்கள் முருகன், ரமேஷ்பாபு, திருமலை, கருணாநிதி, முருகவேல், ராமலிங்கம், கார்த்திராஜா, சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் கௌதம், ரமேஷ், சரவணமுருகன், மொளசி ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, யூனியன் துணை சேர்மன் ராஜபாண்டி ராஜவேலு, நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். முன்னதாக டிசிஎம்எஸ் எதிரில் 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை அமைச்சர் கே.என்.நேரு ஏற்றி வைத்தார்.

The post திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைச்சர் நேரு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister Nehru ,West District ,DMK ,Tiruchengode ,West District DMK ,Minister ,KN Nehru ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்