×

திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக புதிய மேலாளர் பொறுப்ேபற்பு

திருச்சி, ஏப்.18: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) திருச்சி மண்டலத்திற்கான புதிய பொது மேலாளராக சதீஸ் குமார் நேற்று பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக மேலாளர்கள், துணை மேலாளர்கள் ஆகியோரை கடந்த ஏப்.15 அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திரரெட்டி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம் மண்டல பொது மேலாளராக பணியாற்றி வந்த சதீஸ்குமார், அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) திருச்சி மண்டல பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று காலை திருச்சி மண்டல மேலாளராக சதீஸ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

The post திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக புதிய மேலாளர் பொறுப்ேபற்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Regional State Transport Corporation ,Trichy ,Satheesh Kumar ,Tamil Nadu State Transport Corporation ,Kumbakonam ,Trichy Region ,Tamil Nadu State Transport Department… ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்