×

திருச்சி போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் பறக்க முயன்றவர் கைது

 

திருச்சி, மே 25: போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (51). இவர் மே 23ம் தேதி இரவு சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது இமிகிரேஷன் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மதியழகனை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

The post திருச்சி போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் பறக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Singapore ,Mathiyazhagan ,Aranthangi Arasarkulam ,Pudukkottai district ,Trichy airport ,Singapore… ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்