×

திருச்சியில் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது

 7 இளநிலை பாட பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்
 27ம் தேதிக்குள் சேர்ந்து பயன்பெற அழைப்பு

திருச்சி, மே 11: திருச்சி தந்தை பொியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாியில் மே.7முதல் 27ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து தந்தை பெரியார் கல்லூாி முதல்வர் அங்கம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு, திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாரியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கலை மற்றம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இணைய வழியில் விண்ணப்ப பதிவு இந்த கல்லூரி வளாகத்தில் மே.7ம் தேதி முதல் மே.27ம் தேதி வரை நடைபெறும்.

எனவே கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த கல்லூாியில் ஈ- சேவை மையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எழும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இந்த கல்லூாியில் உதவி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு அவர்கள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல மணப்பாறையில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025, 2026ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மே 7ம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மணப்பாறை சமத்துவபுரத்திற்கு அருகிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.A. தமிழ், B.A.ஆங்கிலம், B.Com., B.Sc இயற்பியல், B.Sc கணினியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக இந்த ஆண்டு முதல் B.Com (C.A), B.C.A ஆகிய பாடப்பிரிவுகளும் கற்பிக்கப்பெற உள்ளது.

இந்த 7 இளநிலை பாடப் பிரிவுகளுக்குமான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.48. பதிவுக்கட்டணம் ரூ.2. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்குப் பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டுமே ஆகும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். கல்லூரியிலேயே வந்து விண்ணப்பிப்பதற்கும் மாணவர் சேர்க்கை உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சிறந்த ஆய்வக வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, சிறந்த நூலக வசதி உள்ளிட்டவைகளை கொண்டுள்ள மணப்பாறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மாணவ, மாணவிகள் கல்வி கற்க பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாளான மே 27 ம் தேதி எனக் கல்லூரி முதல்வர் மலர்மதி தெரிவித்துள்ளார்.

The post திருச்சியில் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thaatthaya Poyar Government Arts and Science College ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்