×

திருக்கோவிலூர் அருகேகிணற்றில் மூழ்கி விவசாயி பலி

திருக்கோவிலூர், ஏப். 19: திருக்கோவிலூர் அடுத்த வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோதண்டராமன் (38), விவசாயி. இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2 வருடமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகே உள்ள விவசாய கிணற்றின் அருகே கோதண்டராமனின் காலணி மற்றும் துணிகள் கிடந்துள்ளதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் போலீசார், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்ததில் கோதண்டராமன் இறந்த நிலையில் கிணற்றில் மூழ்கி இறந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள், கோதண்டராமனின் உடலை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாபு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருக்கோவிலூர் அருகே
கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
appeared first on Dinakaran.

Tags : Tirukovilur ,Thirukovilur ,Gothandaraman ,Vadamarudhur ,Yehumalai ,
× RELATED திருக்கோவிலூாில் பரபரப்பு தெரு நாய் கடித்து 14 பேர் படுகாயம்