×

திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை பகுதிகளில் முன் கரீப் பருவ வேளாண் விழிப்புணர்வு முகாம்

ஜெயங்கொண்டம், ஜூன். 6: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஆண்டிமடம் ஒன்றியம் திருகளப்பூர் கிராமத்தில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் என்ற தலைப்பில் முன் கரீப் பருவ வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்பம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகு கண்ணன் முகாமின் நோக்கம் மற்றும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விரிவாக கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் வளர்ச்சி கழக திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி முனைவர் கற்பகம் தொழில்நுட்ப உரையாற்றுகையில். வாழை ரகங்கள் மற்றும் பயன்கள்,உழவன் செயலியின் பயன்பாடுகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கரும்பு இனபெருக்க நிறுவனம் கோயம்புத்தூரில் இருந்து முதுநிலை விஞ்ஞானி முனைவர் இளையராஜா கலந்து கொண்டு, கரும்பு ரகங்கள் மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விரிவாக எடுத்து கூறினார். மேலும் அரியலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் கணேசன் பேசுகையில், வேளாண் திட்டங்கள் பற்றி கூறினார். மேலும் ஆண்டிமடம் வட்டார தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர் வேதநாயகி மற்றும் ராதிகா தோட்டக்கலை மற்றும் வேளாண் திட்டங்கள் பற்றி கூறினார்கள்.மேலும் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை அலுவலர் சசிகுமார் மற்றும் ஒழுங்கு விற்பனை கூட அலுவலர் சுரேஷ் ஆகியோர் வேளாண் வணிக திட்டம் பற்றி தெரிவித்தனர்.இப்கோ உர நிறுவன அலுவலர் தினேஷ் கலந்து நேனோ யூரியா பயன்பாடு பற்றி கூறினார்.

தொடர்ந்து விஞ்ஞானிகளும் விவசாயிகளும் கலந்துரையாடல் செய்தனர். அதில் கலந்துரையாடுகையில் விவசாயிகளுக்கான பிரச்சினைகளுக்கு விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினார்கள். மேலும் முகாமில் கலந்து கொண்ட அதிகாரிகள் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டனர் .இதேபோன்று கோவில் வாழ்க்கை மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் கிராமங்களிலும் சுற்றுசூழல் தினம் மற்றும் முகாம் ஆகியவை நடைபெற்றது. மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜ்கலா, ராஜா ஜோஸ்லின், அசோக் குமார், திருமலை வாசன், ஷோபனா மற்றும் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை சிறப்பாக நடத்தினர். முகாம் சிறப்பாக நடைபெற மையத்தின் அலுவலர்கள் செல்வம் மற்றும் ரமணி ஆகியோர் கலந்து கொண்டு உதவி செய்தனர்.

மேலும் ஆண்டிமடம் வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார், உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் கலந்து கொண்டு முகாம்கள் சிறப்பாக நடைபெற உதவியாக இருந்தனர்.ஒவ்வொரு முகாமிலும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.மேலும் முகாமில் வேளாண் கண்காட்சிகள்,செயல் விளக்கங்கள் ஆகியவை காண்பிக்கப்பட்டது. முகாமின் நிறைவாக விவசாயிகளிடையே நிகழ்வு பற்றிய கருத்து கணிப்பு கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

The post திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை பகுதிகளில் முன் கரீப் பருவ வேளாண் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Pre-Caribbean Agricultural Awareness Camp ,Temple Life Areas ,Thirukalpur ,Jayangondam ,Ariyalur district ,Antimadam Union ,Creed Agricultural Science Centre ,Sozhamadevi ,Palur ,Propaganda Movement for Agricultural Development ,Thirukalapur ,Pre ,Caribbean Season ,Thirukalpur, ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...