- திண்டுக்கல்
- கின்னஸ் உலக சாதனைகள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உடற்கல்வி
- விளையாட்டு பல்கலைக்கழகம்
- சென்னை
- இந்தியா
- தின மலர்
திண்டுக்கல்: சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கராத்தே கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் சுமார் 2700 கராத்தே வீரர்கள் 10 முதல் 60 வயது வரையிலான கராத்தே மாஸ்டர்கள், கராத்தே வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் 30 நிமிடங்களில் கராத்தேவில் பஞ்சஸ், பிளாக், சூட்டோ, எல்மோ, கிக்ஸ் இவற்றில் முக்கியமாக லோயர் மிடில் அப்பர் என்ற வகையிலான கராத்தே வகைகளில் தொடர்ச்சியாக செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சிறப்பு விருந்தினர் லண்டன் ரிஷிநாத் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த கராத்தே வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கோபிநாத் முன்னிலை வகித்தார் பயிற்சியாளர் ராஜகோபால் தலைமை வகித்து சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு வழங்கினார்.
The post திண்டுக்கல்லில் கராத்தேயில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.
