×

திண்டுக்கல்லில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

திண்டுக்கல், ஜூன் 16: திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் தலைமையில், தேர்தல் ஆணையர் திருச்சி மாவட்ட தலைவர் உதுமான் அலி மேற்பார்வையில் பார்வையில் தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட தலைவராக சந்திரசேகரன், மாவட்ட செயலாளராக பாலாஜி பாபு, மாவட்ட பொருளாளராக ராஜா, திண்டுக்கல் கல்வி மாவட்ட தலைவராக இன்னசென்ட் லியோ, மகளின் அணி செயலாளராக ஜாஸ்மின்,

வடிவுக்கரசி, யமுனா, மாவட்ட அமைப்பு செயலாளராக வெங்கடேஷ், ஒருங்கிப்ணைப்பாளராக சீனிவாச பெருமாள், சட்ட செயலாளராக கங்காதரன், மாவட்ட செய்தி தொடர்பாளராக கண்ணன், மாவட்ட துணை தலைவர்களாக ரமேஷ்குமார், லுக்மான் முகமது, கிரிஅரசன், பாலமுருகன், மாவட்ட துணை செயலாளராக பாலன், வீரமணி, கரிகாலன், நளினி ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post திண்டுக்கல்லில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Election of Teachers' Union Executives ,Dindigul ,Tamil Nadu Teachers' Union ,Murugesan ,Trichy District ,President ,Udhuman Ali ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...