×

திங்கள்நகரில் கலைஞர் பிறந்த நாள் விழா

திங்கள்சந்தை, ஜூன் 6: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா தமிழ் செம்மொழி தினமாக குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில் அருகில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் பிஎஸ்பி சந்திரா கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள், நோட்டு புத்தகங்கள், இனிப்புகள் ஆகியவற்றையும் வழங்கினார். விழாவில் கழக நிர்வாகிகள் ஆன்றோ சர்ச்சில், ரமணிரோஸ், முருகன், வைகுண்டதாஸ், ஜெயசீலன், சசி சுபாசிங், ஜாண்லீபன், சேவியர் ஏசுதாஸ், ரெஜூலின் ராஜகுமார், சுஜெய் ஜாக்சன், ஜெயசேகர், லீமா கில்டா, ஷகிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ரீத்தாபுரம், கல்லுக்கூட்டம், திங்கள்நகர் பஸ் ஸ்டாண்ட், தலக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த விழாக்களிலும் ஒன்றிய செயலாளர் சந்திரா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

The post திங்கள்நகரில் கலைஞர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Thingalnagar ,Thingalshandhai ,Tamil Nadu ,Chief Minister ,Kalaignar Karunanidhi ,Tamil Classical Language Day ,Kurundancode West Union DMK ,Thingalnagar Radhakrishnan Temple ,Union Secretary ,BSP… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...