×

தா.பேட்டை சிவாலயத்தில் வைகாசி விசாக வழிபாடு

 

தா.பேட்டை, ஜூன் 10: தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அப்போது சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் 108 வலம்புரி சங்குகள் வைத்து சங்காபிஷேகம், யாக வேள்வி நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை, ஆறுமுகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

The post தா.பேட்டை சிவாலயத்தில் வைகாசி விசாக வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visakha ,Tha.pettai Shivalayam ,Tha.pettai ,Valli ,Deivanai Sametha Arumuga Peruman ,Kasi Visalakshi ,Udanamar ,Kasi Vishwanathar Shivalayam ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்