- ஜீப்
- தர்மபுரி
- தர்மபுரி மாவட்ட செய்திகள்
- மக்கள் தொடர்பு அலுவலர்
- லோகநாதன்
- தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்
- தின மலர்
தர்மபுரி, ஜூன் 19: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஜீப் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இவ்வாகனத்தை ரூ.1 லட்சத்து 25ஆயிரம் என்ற விலைக்கு விற்பனை செய்திட, தொழில்நுட்ப வல்லுநர் குழுவினரால் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்படி வாகனத்தை வருகிற 23ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மறு ஏலம் விடப்பட உள்ளது. இந்த மறு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு, விலைப்புள்ளியை கோரலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post தர்மபுரியில் அரசு ஜீப் ஏலம் appeared first on Dinakaran.
