×

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: திமுக கூட்டணி 24 இடங்களில் முன்னிலை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி 24 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் ? தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று இன்று மதியம் தெரிந்துவிடும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தலைமையில் பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் என 5 அணிகள், தேர்தல் களத்தை சந்தித்தது. அதில் திமுக, அதிமுகவுக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவியது. 3வது இடத்தைப் பிடிக்கத்தான் மற்ற 3 கட்சிகளும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. …

The post தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: திமுக கூட்டணி 24 இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Assembly ,DMK ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly elections ,DMK alliance ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...