×

தமிழக ஆளுநர் பங்கேற்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இருச்சக்கர வாகன பேரணி

நாகர்கோவில், மே.6: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய இரு சக்கர வாகன பேரணி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் களியக்காவிளையில் இருந்து நேற்று தொடங்கியது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலையில் நடந்தது. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். நாகர்கோவிலுக்கு வந்த வாகன பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் கங்காதரன், மாநில ஆலோசகர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புனிதன், மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஆஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை போன்று கோவையில் இருந்தும், ராமேஸ்வரத்தில் இருந்தும் என்று மொத்தம் 3 குழுக்கள் வரும் 16ம் தேதி சென்னை சென்றடைகின்றனர்.

The post தமிழக ஆளுநர் பங்கேற்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இருச்சக்கர வாகன பேரணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,CBS abolition movement ,-wheeler rally ,Nagercoil ,Kaliyakavilai ,CBS ,abolition ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...