- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
- திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலகம்
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…
- தின மலர்
புதுக்கோட்டை, ஜூன் 19: திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் முறை தவறிய பணி மாறுதலை தடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. “
திருவரங்குளம் வட்டார தலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் அமுதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி வட்டார நிர்வாகிகள் விளக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் செபஸ்தியான் நிறைவுறையாற்றினார். பொருளாளர் மலர்விழி நன்றி கூறினார்.
The post தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
