×

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம்: செப் 7 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு..!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. அத்துடன் www.tneaonline.org  இணைய தள வழியாக வருகிற ஆக 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதை தொடர்ந்து செப் 4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆக 25ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு வருகிற செப் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. அத்துடன் அக் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இதேபோல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்திலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் வருகிற 10 ஆம் தேதி வரை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம்: செப் 7 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு..! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை...