×

தமிழகத்தில் இருந்து கடத்திய 644 கிலோ பீடி இலை பறிமுதல் இரண்டு படகுகள் பறிமுதல்

 

ராமேஸ்வரம், ஏப்.29: தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி சென்ற 644 கிலோ பீடி இலையை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி இரண்டு படகுகளை பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியின் போது கல்பிட்டி மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதியில் சோதனையிட்டனர். இதில் தலைமன்னார் மணல்திட்டை சுற்றியுள்ள கடல் பகுதியில், வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சிறப்பு கடற்படைப் படைக்குழு 95 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயா குடாவ கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 150 கிலோ பீடி இலைகளுடன் ஒரு டிங்கி படகையும், நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கு கடற்படை கப்பல் கெளனி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 399 கிலோ கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையால் மொத்தம் 644 கிலோ பீடி இலையை கைப்பற்றியது.

The post தமிழகத்தில் இருந்து கடத்திய 644 கிலோ பீடி இலை பறிமுதல் இரண்டு படகுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rameshwaram ,Sri Lankan Navy ,Sri Lanka ,Tamil Nadu Sea ,navies ,Kalpitiya ,Negombo ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...