- முதலீட்டு
- பாதிக்கப்பட்டவர்களுக்கு
- சங்கம்
- தனியார் நிதி நிறுவனங்கள்
- நாகப்பட்டினம்
- தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம்
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் சங்கம்
- நாகப்பட்டினம் அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம்
- சிதம்பரம்
- தனியார் நிதி நிறுவன சங்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
- தின மலர்
நாகப்பட்டினம், ஆக.1: ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கூட்டமைப்பு சார்பில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் நாகப்பட்டினம் அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். அரசு பணியாளர் ஓய்வூதியர் சங்க தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். தனியார் நிதி நிறுவனம்( சிவசக்தி நிதி நிறுவனம்) முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சல் காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோரிக்கைகளை செவிசாய்த்து நன்கு ஒத்துழைப்பு கொடுத்த பொருளாதார குற்றப்பிரிவு நாகப்பட்டினம் டிஎஸ்பி நன்றி தெரிவிப்பது. பொருளாதார இழப்பில் உள்ள அனைவரும் பயன்பெற தக்க வகையில் நம் கோரிக்கைகளை நிறைவேற்றிய கலெக்டர், எஸ்பி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவர் சார்பில் கோரிக்கையை மனுவை தமிழ்நாடு முதல்வர், தலைமை செயலாளர், டிஎன்பிஐடி நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
The post தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு பாதிக்கப்பட்டவர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.