×

தனியார் ஊழியரை தாக்கியவர்கள் மீது வழக்கு

தேவதானப்பட்டி, ஏப். 18: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி கோம்பைப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சக்தி(27). இவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக உள்ளார். இந்நிலையில் சக்தி கடந்த 9ம் தேதி தேவதானப்பட்டி- பெரியகுளம் சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது டி.வாடிப்பட்டி பிரிவில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த மூன்று பேர் சக்தியை வழிமறித்து தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் ஊழியரை தாக்கியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Devdanapatti ,Annamalai ,Shakti ,Silvarpatty Gompipillai Street ,-Beryakulam Road ,Devadanapatti-Peryakulam Road ,Wadi Patti ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...