×

தனிப்பிரிவு எஸ்ஐ உட்பட 4 போலீசார் அதிரடி மாற்றம்

 

புதுக்கோட்டை, ஜூன் 27: புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தனிப்பிரிவு எஸ்ஐ பிரபாகரன் பணிபுரிந்து வந்தார். இவர், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் மற்றும் குவாரி மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்து வந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு முழுமையாக விசாரணை செய்து பிரபாகரனின் சட்ட விரோத செயல்களுக்கு பிற காவல் நிலையங்களில் பணிபுரிந்த தனிப்பிரிவு காவலர்களான வல்லத்திராக்கோட்டை செல்வேந்திரன், மணமேல்குடி ராமபாண்டியன், அறந்தாங்கி பாலசுப்பிரமணியன் ஆகியோர் இருந்ததும் தெரிய வந்தது. இவர்களின் மீதான விசாரணை அறிக்கை தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த அறிக்கையை விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த டிஜிபி, 4 போலீசாரையும் தென் மண்டலத்துக்கு இடமாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post தனிப்பிரிவு எஸ்ஐ உட்பட 4 போலீசார் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : SI ,Pudukkottai ,Prabhakaran ,Pudukkottai district ,SP ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...