×

தஞ்சையில் வரும் 23ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு குறைத்தீர் கூட்டம்

தஞ்சாவூர், மே 21: தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வளாகம் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கத்தில் வரும் 23ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சையில் வரும் 23ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு குறைத்தீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur District Collectorate Complex Public Grievance Redressal Hall ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...