×

தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு

 

தஞ்சாவூர், மே 24: ஏகாதசி யை முன்னிட்டு தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் நேற்று காலை ஏகாதசியை முன்னிட்டு தேவி பூதேவி சமேத  பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இத்தலத்தில் பக்தர்கள் பிரதி ஏகாதசி, திருவோணம், சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது நம்பிக்கை. இத்தலம் தஞ்சாவூர் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

The post தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Ekadashi ,Thanjavur Prasanna ,Venkatesa Perumal Temple ,Thanjavur ,Thanjavur Nalukal Mandapam Prasanna Venkatesa Perumal Temple ,Nalukal Mandapam Prasanna Venkatesa Perumal Temple ,Thanjavur Prasanna Venkatesa Perumal Temple ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...