×

தஞ்சாவூர் நகரிய கோட்ட 20ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

தஞ்சாவூர், மே 19: தஞ்சாவூர் நகர் பொது மக்கள் நலன் கருதி, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20-05-2025 செவ்வாய்கிழமை காலை 11மணி முதல் 1மணி வரை தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா தலைமையில் தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங் யூனிட், காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி,

மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் குளம், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைகழக வளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திர நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம் என செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் நகரிய கோட்ட 20ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Urban Division ,Thanjavur ,Thanjavur City ,Thanjavur Electricity ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...