×

தஞ்சாவூர் தபால் நிலையம் அருகில் பாஜவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஏப்.17: காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் பாசிச பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்வில் துணை தலைவர்கள் லட்சுமி நாராயணன், வயலூர் ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜெயபிரகாஷ், வடிவேல், ஜான்சன், திருஞானம், செல்வம், செந்தில் சிவகுமார், மகேந்திரன், ஆதி. நாராயணன் சந்திரசேகர், கோமதி மற்றும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் தபால் நிலையம் அருகில் பாஜவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Thanjavur Post Office ,Thanjavur ,BJP government ,President ,Sonia Gandhi ,Rahul Gandhi ,Thanjavur Municipal Corporation ,Head ,Post ,Office… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...