×

தஞ்சாவூரில் கலைஞர் சிலை அமைக்க இடம் தேர்வு

தஞ்சாவூர், மே 12: தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாநிலங்கலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, மேயர் சண்.ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், தஞ்சை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடன்இருந்தனர்.

The post தஞ்சாவூரில் கலைஞர் சிலை அமைக்க இடம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Municipal Administration and Drinking Water Supply ,Minister ,K.N. Nehru ,Thanjavur Corporation ,Chief Minister ,Karunanidhi ,Anna Statue ,Thanjavur Corporation… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...