×

தக்கலையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 

தக்கலை,ஜூன் 25: தக்கலையில் வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்மநாபபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மீதுபொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி காவல் துறையை கண்டித்து தக்கலையில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்கத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பெஞ்சமின் முன்னிலை வைத்தார் இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். மேலும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டன.

The post தக்கலையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thakkalai ,Padmanabhapuram Lawyers Association ,Lawyers Association… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...