×

தகராறில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, ஏப். 25: பெரியகுளம் அருகே தகராறில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி மேற்கு தெரு, எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்தவர் இடும்பன்(53). இவர் இதே பகுதியில் இவரது உறவினர் பெண்ணான வைத்தீஸ்வரி என்பவர் அவரது குடும்ப பிரச்னை தொடர்பாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 108ஆம்புலன்ஸ் மூலம் வைத்தீஸ்வரியை ஏற்றிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த வைத்தீஸ்வரியின் உறவினர்கள் கிருஷ்ணசாமி மற்றும் அழகர்சாமி ஆகியோர் இடும்பனால் தான் எங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது என கூறி இடும்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இடும்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த இடும்பன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் கிருஷ்ணசாமி, அழகர்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தகராறில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Devadhanapatti ,Periyakulam ,Idumban ,Saruthupatti West Street, MGR Colony ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...