நத்தம், ஜூன் 10: நத்தம் அருகே கோபால்பட்டி செடிப்பட்டியைச் சேர்ந்தவர் கூத்தன் (70). இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகர்ப் பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டு பஸ் ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது காசம்பட்டியைச் சேர்ந்த சந்துரு (19) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், கூத்தன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்துகள் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post டூவீலர் மோதி முதியவர் படுகாயம் appeared first on Dinakaran.
