- ஞாயிறு பொன்னியம்மன் கோவில் திருவிழா
- பொன்மன்மீந்தநல்லூர்
- கும்பகோணம்
- பொன்னியம்மன் கோவில் திருவிழா
- பொன்னியம்மன் கற்புசாமி கோவில் திருவிழா
- பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்
- சக்தி கரகம்
- பொன்னியம்மன் கற்புசாமி
கும்பகோணம், மே.29:கும்பகோணம் அருகே பொன்மான்மேய்ந்தநல்லூர் பொன்னியம்மன் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பொன்மான்மேய்ந்தநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பொன்னியம்மன் கருப்புசாமி ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பொன்னியம்மன் கருப்புசாமிக்கு சக்தி கரகம், செடில், காவடி, அலகு காவடி ஆகியவை பொன்மான்மேயந்தநல்லூர் கருவங்குளம் கரையிலிருந்து புறப்பட்டு வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் பொன்மான்மேய்ந்தநல்லூர் நாட்டாண்மைகள், கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
The post ஞாயிறு தோறும் படியுங்கள் பொன்மான்மேய்ந்தநல்லூரில் பொன்னியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.
