- ஜெயங்கொண்டம் சர்வதேச படுகொலை தினம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
- Jayankondam
- அரியலூர் கிழக்கு மாவட்டம்
- சர்வதேச படுகொலை தினம்
- முல்லிவைக்கல்
- அரியலூர் கிழக்கு மாவட்டம்...
- தின மலர்
ஜெயங்கொண்டம், மே19: விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஜெயங்கொண்டம் நால்ரோட்டில் முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நேற்று சர்வதேச படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போரில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு அரியலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் ஜெயங்கொண்டம் நால்ரோட்டில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், மாநில பொறுப்பாளர் சிபி ராஜா, மாவட்ட அமைப்பாளர்கள் வேல்முருகன், சின்ன ராஜா, நகர்மன்ற உறுப்பினர் காஞ்சனா சரவணன், பரமசிவம், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் எனமாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
The post ஜெயங்கொண்டம் சர்வதேச படுகொலை நாள் அனுசரிப்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடந்தது appeared first on Dinakaran.
