×

ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உணவு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எம்எல்ஏ வழங்கினார்

ஜெயங்கொண்டம், ஜூன் 5: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கணேசன் ஏற்பாட்டில், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு ஹெலன் கெல்லர் செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு, நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் மணிமாறன் ஏற்பாட்டில், கங்கைகொண்டசோழபுரத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், கழக கொடியேற்றி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமராஜன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் செல்வராஜ்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குலோத்துங்கன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், ஜெயங்கொண்டம் கிழக்கு, மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உணவு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Jayankondam Union DMK ,MLA ,Kalaignar ,Jayankondam ,Muthamizharignar ,Dr. ,Jayankondam East Union Association ,Ganesan ,Helen Keller Cross Road ,Jayankondam… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...