×

ஜெயங்கொண்டம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

 

ஜெயங்கொண்டம் ஜூன்.26: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வெண்புள்ளி விழிப்புணர்வு நேர்வினை தமிழக அரசு கவனமுடன் ஆய்வு செய்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் பொருட்டு ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கல்லூரி முதல்வரும், முனைவருமான ராசமூர்த்தி உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திராளாக கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post ஜெயங்கொண்டம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Jayankondam Government Arts and Science College ,Jayankondam ,Tamil Nadu government ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...