×

ஜிஹெச்சில் சிறப்பு நூலகம் திறப்பு

சிவகங்கை, ஜூன் 11: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு நூலக திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நூலகத்தின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல் பாண்டி வரவேற்றார். உதவி மருத்துவ அலுவலர் தென்றல் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

சிறை கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நூலக வாசகர் வட்டத் தலைவர் அன்புத் துரை, எழுத்தாளர் மற்றும் நூலக நண்பர் திட்டத்தை சார்ந்த ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் நூலகர் முத்துக்குமார் கனகராஜ், நூலக பணியாளர்கள் மணி, ராமநாதன் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நூலக வாசகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருப்பு சரி பார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் நன்றி கூறினார்.

The post ஜிஹெச்சில் சிறப்பு நூலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : GH. ,Sivaganga ,Sivaganga Government Medical College Hospital ,Chief Minister ,M.K. Stalin ,District Central Librarian ,Venkatevel Pandi ,GH ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...