×

சொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதையொட்டி, தங்களது சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் பேருந்து, கார், வேன் என பல வாகனங்களில் சென்றனர். பொங்கல் பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இவர்கள், பஸ், கார்கள் மூலம் நேற்று முன் தினம் இரவு முதல் சென்னைக்கு திரும்பினர். ஒரே சமயத்தில் ஏராளமானோர் சென்னை நோக்கி வந்ததால் பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்வதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலானது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்….

The post சொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pongal: ,Paranur tollbooth ,Pongal festival ,Pongal: Congestion ,
× RELATED பண்டிகைக் காலங்களில் தனியார்...